2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

குழாய் நீர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை பிரதேசத்தில் நீண்ட காலமாக  நிலவி வந்த குழாய் நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் கல்முனை பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதில் பொது செயளாலருமான நிஸாம் காரியப்பருக்கும் கிழக்கு மாகாண நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் எம்.கே.ஹப்புஆராயிச்சிக்கும் இடையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் நந்தசிறி, பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.சாலித்தின் மற்றும் இஸ்லாமாபாத் கூட்டு ஆதன முகாமைத்துவ சபை பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை மாநர சபைக்குட்பட்ட கல்முனை, இஸ்லாமாபாத், நற்பட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது, சேனைக்குடியிருப்பு மற்றும் குருந்தையடி ஆகிய பிரதேசங்களில் நீரின் அமுக்கம் மிகக் குறைவாக உள்ளமையினால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறித்த குழுவினருக்கு முன்வைக்கப்பட்டது.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜெயிக்கா வேலைத்திட்டத்தின் கீழ் இங்னியாகல பிரதேசத்தில் கல்முனை பிரதேச நீர் தாங்கிக்கு போதியளவு நீரை கொண்டு வருவதற்காக தற்போதுள்ளதை விட நான்கு மடங்கு பெரிய நீர் குழாயிகள் பொருத்தப்பட வேண்டும். இதன் மூலம்தான் நிரந்தர தீர்வு ஒன்றைக் காணலாம் என பொது முகாமையாளர் எம்.கே.ஹப்புஆராயிச்சி தெரிவித்தார்.

இதனடிப்படையில் இப்பகுதியில் உள்ள சகல பிரதேசங்களுக்கம் போதியளவு நீரை வழங்கும் நோக்கோடு நீர் வழங்கள் சபையின் ஏற்பாட்டில் இரண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக கூறினார்.

இத்திட்டம் நிறைவடைவதற்கு சுமார் ஒன்றரை வருடங்கள் செல்லும். அதனையடுத்தே இப்பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றார்.


  Comments - 0

 • pasha Wednesday, 30 November 2011 09:56 PM

  இது ஒரு நீண்ட கால பிரச்சினை. இதை தீர்ப்பதற்கு முன் வந்த சகலருக்கும் நன்றிகள்.

  Reply : 0       0

  Thariq Niyas Wednesday, 30 November 2011 12:11 AM

  போலியாக செயல்படும் தலைமைகளுக்கு மத்தியில் உங்களது சேவை பாராட்டத்தக்கது... கல்முனைக்கு ஒரு சிறந்த தலைமைத்துவம் உங்கள் மூலம் உருவாகட்டும்...

  Reply : 0       0

  waaqiff Wednesday, 30 November 2011 04:25 AM

  இதுதான் தேவை. சும்மா கதிரை சூடக்குவோர் வேண்டாம்.

  Reply : 0       0

  hameed Wednesday, 30 November 2011 04:42 AM

  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள்.

  Reply : 0       0

  kalmunaiyaan Wednesday, 30 November 2011 05:53 AM

  பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? அடுப்பு பத்தி பிரயோசனமில்லை....அரிசி இருக்கணும்.......

  Reply : 0       0

  ummpa Wednesday, 30 November 2011 07:46 PM

  யார் தூங்கினாலும் நான் விடமாட்டேன் என்று முழுமூச்சா வரி அறவிட்டு கொடுக்கிறார். ஏன்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .