Menaka Mookandi / 2011 நவம்பர் 30 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று பகல் முழுவதும் அடிக்கடி பெய்து வந்த மழை காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கிப் போனது. அதேவேளை, இன்று காலையிலிருந்து பெய்த மழையினால் பல இடங்களில் வடிகான்கள் நிரம்பி வழிந்தன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் முறையாகவும், தொடராகவும் வடிகான்கள் நிர்மாணிக்கப்படாமையால் மழை நீர் வடிந்தோட முடியாமல் தேங்கிக் கிடப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
இந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் அவர்களாலேயே மண்ணிட்டு மூடப்பட்ட வடிகான்கள் இன்று அவசர அவசரமாக தோண்டப்பட்டதோடு, அவைகளுக்கு கொங்றீட் மூடிகளும் இடப்பட்டன. இடையிடையே மழை விட்ட போதிலும், மப்பும் மந்தாரமுமான வானிலையே காணப்படுகிறது.
.jpg)
8 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Oct 2025