2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்திக் கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட முதியோர்களுக்கு பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிக் கணக்கு வைப்புப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறைப் பிரதேச செயலக சமூக பராமரிப்பு மையக் கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால்,  70 வயதுக்கு மேற்பட்ட சமுர்த்தி நிவாரணம் பெறுபவர்கள் மற்றும் பொதுசன மாதாந்த உதவிப் பணம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 1,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுவருகின்றது.

முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், சமூக சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம்.இத்ரீஸ், ஏ.எல்.எம்.அன்ஸார், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.இல்லியாஸ் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .