2021 ஜனவரி 20, புதன்கிழமை

சமூகமட்ட தொண்டர்களுக்கான பயிற்சி செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சமூதாய மட்டத்திலான புனருத்தாபன தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சமூகமட்ட தொண்டர்களுக்கான பயிற்சி செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக சமூக பராமரிப்புக் கட்டிடத்தில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட சமுதாய மட்ட புனருத்தாபன அமைப்பின் இணைப்பாளரும் சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தருமான எம்.கலந்தர், மற்றும் சிரேஷ்ட கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் எம்.எம்.இல்லியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் சமூதாய மட்டத்தில் நாம் தொண்டு புரிபவர்கள் என்ற அடிப்படையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், விசேட தேவையுடையவர்களை நாம் எவ்வாறு கையாளுவது, முதியோர் விடயத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இவர்களுக்கு உதவக் கூடிய தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .