2021 ஜனவரி 20, புதன்கிழமை

கோளாவில் பகுதியில் வடிகான் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்ளெழுச்சித் திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கோளாவில் 02ஆம் பிரிவில் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்வடிகான் 37 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

கோளாவில் 02ஆம் பிரிவின் மீள்ளெழுச்சித் திட்டத்தின் தலைவர் பி.பேரின்பத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் செயலாளர் ரீ.ஜெயாகர், பிரதேசசபைத் தவிசாளர் கே.ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு
பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன் அடிக்கல்லையும் நாட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .