2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

தையல் பயிற்சி நெறிக்கான நேர்முகப் பரீட்சை

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் தையல் பயிற்சி நெறிக்கான பயிற்சியாளர்களைத் தெரிவு செய்வதற்குரிய நேர்முகப் பரீட்சை இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக இப் பயிற்சி நடைபெறவுள்ளது.

அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் வி.ரூபன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம். சரீப், நிர்வாக உத்தியோகத்தர் எம்.றபியுத்தீன், நிகழ்சித் திட்ட உதவியாளர் எஸ்.எம்.றிஜால்தீன் மற்றும் பயிற்சி ஆசிரியை எஸ்.எம்.ஜனுல் பாரியா ஆகியோர் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டோரைத் தெரிவு செய்தனர்.

30 பேரைத் தெரிவு செய்வதற்கான மேற்படி நேர்முகப் பரீட்சைக்கு நூற்றுக்கும் அதிகமானோர் சமூகமளித்திருந்தனர்.

இப்பயிற்சி நெறியானது ஒரு வருட காலத்தைக் கொண்டதாகும். பயற்சிக் காலத்தின் போது நாளொன்றுக்கு 100 ரூபாய் வீதம் பயிற்சியாளர்களுக்கு ஊக்கப்படி வழங்கப்படும்.

பயிற்சியின் இறுதியில் நடத்தப்படும் பரீட்சையில் சித்தியடைவோருக்கு டிப்ளோமா தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இச் சான்றிதழைக் கொண்டோர், கல்விக் கல்லூரி மற்றும் ஏனைய தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .