2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றிலிருந்து தப்பியோடியவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
 

அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய  சந்தேக நபர் அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை ஊழியர் ஒருவரின் கட்டுப்பாட்டிலிருந்த இந்த சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்திலிருந்து கடந்த 9ஆம் திகதி தப்பியோடியிருந்தார்.

அக்கரைப்பற்று பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே.அஸாரின் தலைமையிலான குழுவினரே இந்த சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் அக்கரைப்பற்று, சம்மாந்துறை உட்பட பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

தப்பியோடிய இந்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இவர் கைதுசெய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .