2021 ஜனவரி 20, புதன்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2012 நவம்பர் 21 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், ஏ.ஜே.எம்.ஹனீபா)

ஒலுவில் பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் தனியார் பஸ் வண்டியின் நடத்துனர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பஸ் வண்டியிலிருந்து தவறி வீழ்ந்த நடத்துனர் மீது – அதே பஸ் வண்டியின் சக்கரம் ஏறியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பலியானவர் அக்கரைப்பற்றைச் சொந்த இடமாகக் கொண்ட கணேஷமூர்த்தி என்பவராவார். கோமாரி பிரதேசத்தில் திருமணம் செய்துள்ளார். 27 வயதுடைய இவர் ஒரு குழந்தையின் தந்தையாவார்.

மட்டக்களப்பில் இருந்து அக்கரைப்பற்றினை நோக்கி பயணிகளுடன் வந்த பஸ் வண்டியானது, ஒலுவில் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக, தரிக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .