2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

பல்கலைக்கழகப்  பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமாகி வெளியாகியதால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 90 பட்டதாரிகளையும் பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அமைப்பினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை மாவட்டச் செயலகம் முன்பாக நடைபெற்ற இவ் ஆர்ப்பட்டாத்தில் பாதிக்கப்பட்ட பல பட்டதாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

'விடுபட்ட 2011 ஆண்டுக்கான பட்டதாரிகளின் நியமனத்தை உடன் வழங்கு', 'பட்டதாரி நியமனத்திற்குள் எங்களையும் இணைத்துக்கொள்', 'அரசே எங்களுடைய நியமனத்தை உறுதி செய்', 'பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிபகிஷ்கரிப்புக்கு நாங்கள் பலியா' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்;;ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அமைப்பின் சார்பில் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாகிப் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தனவிடம் மகஜர் ஒன்றினை கையளித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் காரணமாக பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தினால்  அம்பாறை மாவட்டத்தில் விடுபட்ட  பட்டதாரிகளை நியமனத்தில் உள்வாங்குமாறு இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .