2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வீடுகளை வழங்குமாறு கோரி அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


தங்களுக்காக நுரைச்சோலை பிரதேசத்தில் கட்டப்பட்ட வீடுகளை வழங்குமாறு கோரி சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அக்கரைப்பற்றில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு 8 வருடங்களாகின்றபோதிலும், சுமார் 300 குடும்பங்களுக்கு இதுவரையில்  வீடுகள் வழங்கப்படவில்லை.  இந்நிலையில், நுரைச்சோலை பிரதேசத்தில்  கட்டப்பட்ட வீடுகளை வழங்குமாறு கோரியே  அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் முன்பாக இம்மக்கள் வீதித்தடையை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இவர்களுக்காக சவூதி அரேபியாவால் நுரைச்சோலை பிரதேசத்தில் 450 வீடுகள் அமைக்கப்பட்டன. இருப்பினும்  இவ்வீடுகளில் மக்கள் இன்னமும் குடியேற்றப்படாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


'சுனாமியின் கோரப்பிடிக்குள் சிக்கிய எமது வாழ்வு இன்னும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது', 'எமக்காக சவூதி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகள் எமக்கே வழங்கப்பட வேண்டும்', '8 வருடங்களாகின்றபோதும் ஏன் வீடுகளை வழங்காது தாமதப்படுத்தப்படுகின்றது', 'அரசே ஏழை மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்க தயங்காதே' வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  Comments - 0

 • ameerullah Monday, 31 December 2012 07:56 PM

  காஃபிர்கல் முனாஃபிக்கை விட நல்லவர்கல்

  Reply : 0       0

  Musthafa - AK72 Friday, 28 December 2012 12:58 AM

  இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் எங்கே ?
  இப்போது அவர்கள் அவர்களது அமைச்சுக்கள் மூலம் அனுபவிக்கக்கூடியவற்றை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் போலும்.
  தேர்தல்காலங்களில், அவர்களே இந்நாட்டின் முஸ்லிம்களின் தலைவர்கள் போன்றும், இந்நாட்டின் ஜனாதிபதி போன்றும் பேசுகின்றனர். ஆனால் இப்போ, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண “எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வீடுகள் கிடைக்க ‘தான் ‘ ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.”
  யார் முஸ்லிம்களின் தலைவர் ? பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவா ?

  Reply : 0       0

  add Friday, 28 December 2012 04:37 PM

  சும்மா சொன்னா அவங்களையே ஏதோ என்பிங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .