2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சூரிய சக்தி மின்னொளி வழங்கல்

Super User   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை, கோணாவத்தை ஆற்றங்கரையோர பிரதேசத்திற்கான சூரிய சக்தி மின்னொளி வழங்கலும் ஆற்றங்கரை அணைக்கட்டு திறப்பு விழாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் சூரிய சக்தி மின்னொளியினை ஏற்றி அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன் அணைக்கட்டினையும் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண விதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எம். அமீர் மற்றும் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0

  • akp Tuesday, 06 August 2013 10:59 PM

    மக்களுக்காக என்ன செய்கிறார்கள், ஒன்றுமில்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--