2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

14 வயதுச் சிறுமி ஒருவரை தன்னுடன் அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 21 வயது இளைஞர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில்  நேற்ற ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞரை ஆஜர்படுத்தியபோது நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியும் குறித்த இளைஞரும் ஒருவரையொருவர் நேசித்துவந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை  இரவு அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை   பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.

குறித்த சிறுமி குறித்த இளைஞருடன் இளைஞரின் சகோதரி வீட்டில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து  நேற்று ஞாயிற்றுக்கிழமை  இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--