2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

குடிநிலம் சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 28 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்      
               

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், குடிநிலம் சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தினுள் வியாழக்கிழமை (27) நள்ளிரவு  புகுந்த சில காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்துள்ளன.

மேற்படி கிராமத்திலுள்ள வீடொன்றை உடைத்து இக்காட்டு யானைகள்  சேதமாக்கியதுடன், 04 வீடுகளிலுள்ள தென்னை, வாழை, மரவள்ளி உள்ளிட்டவற்றையும்  சேதப்படுத்தியுள்ளன.

மேலும், இக்கிராமத்தினுள்  நள்ளிரவில் இக்காட்டு யானைகள் புகுந்ததினால் கிராமவாசிகள் கூச்சலிட்டு யானைகளை விரட்டியபோதிலும், யானைகள் அக்கிராமத்தை விட்டுச் செல்லாது அட்டகாசம் புரிந்துள்ளது.  இந்நிலையில், யானைகளுக்கு அஞ்சிய கிராமவாசிகள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி கிராமத்தின் மத்தியிலுள்ள வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக இந்த யானைகளின் அட்டகாசம் தங்களுக்கு இரவு வேளைகளில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன்,  தங்களது காணிகளில் நடப்பட்டுள்ள  வாழ்வாதார பயிர்களையும் சேதப்படுத்துவதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நெல் அறுவடைகள் முடிந்த நிலையில் யானைகள் உணவுக்காக காட்டை அண்டிய கிராமங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் திருக்கோவில் பிரதேசத்தின் சாகாமம், காஞ்சிரம்குடா, குடிநிலம், தாண்டியடி, சங்கமன் ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .