2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் பிரதேசத்தில் திவிநெகும புதுவருட சந்தை

Super User   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு வாழ்வின் எழுச்சி தேசத்தின் மகிழ்ச்சி எனும் தொனிப் பொருளில் திவிநெகும புதுவருட சந்தை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் சனிக்கிழமை (12) தம்பிலுவில் மத்திய சந்தை கட்டிடத் தொகுதியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இவ் ஏற்பாடுகளை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, அம்பாறை மாவட்ட அரச அதிபர் நீல் த அல்விஸ், மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் மற்றும் பல அதிகாரிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து கலந்துகொண்டு திவிநெகும புதுவருட சந்தையினை திறந்து வைக்கவுள்ளனர்.

இவ் சந்தையானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளுர் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் வகையில் இந்த திவிநெகும சந்தை ஆரம்பித்து வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X