2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கிறீன் பூங்கா திறப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் கலாநிதி ஏ.எம்.றிஸ்வியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 'கிறீன் பூங்கா' கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை (9) மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.எச்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் கலாநிதி ஏ.எம்.றிஸ்வி மற்றும் அவரது பாரியார் பாயிஷா றிஸ்வி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு இப்பார்க்கினை திறந்து வைத்தனர்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜெலீல், சாய்ந்தமருது, மாளிகைக்காடு உலமா சபைத் தலைவர் சட்டத்தரணி என்.எம்.முஜீப் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--