2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நூல் வெளியீட்டு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்
அம்பாறை, மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் மகா வித்தியாலய மாணவி ஏ.ஏ.எப். நிப்லா எழுதிய 'எம்மைச் சுழவுள்ள மூலிகைகள் ஓர் அறிமுகம்' எனும் நூல் வெளியீட்டு விழா வித்தியாலய ஹூஸைன் ஞாபகார்த்த ஆராதனை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(15) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நூலின் முதற்பிரதியினை நூலாசிரியரிடமிருந்து, சமாதானத்திற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் பெற்றுக்கொண்டார்.

அம்பாறை சுற்றாடல் அதிகாரசபையின் மாகாணப் பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. நஜீப், அம்பாறை ஆயுர்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியஅதிகாரி எம்.சி.ஏ. காலீத், லயன் கழக ஜி.எல்.ரி. இணைப்பாளர் லயன் எஸ்.எம்.இப்றாலெவ்வை, கொப்சோ நிறுவனத்தின் பணிப்பானர் ஏ.ஜே. காமில் இம்தாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X