2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கல்விக்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது: ஏ.மன்சூர்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


மாணவர்களுக்கு இலவசமாக சீருடை, பாடப்புத்தகங்கள், போஷாக்கான உணவுகள், கல்விக்கான புலமைப்பரிசில்கள் என்பவற்றை அரசாங்கம் வழங்கி வருகின்றது. அதனை நாம் சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும் கல்விக்கு வறுமை தடையாக ஒரு போதும் இருக்ககூடாத வகையில் கல்வித்திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை, சென்னல் கிராமத்தின் 20 வீட்டுத்திட்ட மாணவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அல் அமானத் முன்பள்ளி பாடசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சனிக்கிழமை(19) அவ்வமைப்பின் தலைவர் எம்.பி.ஏ.றமீஸ் தலைமையில் நடைபெற்றது.
 
இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உறையாற்றியபோதே, பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உறையாற்றியவர்,

இந்தப் பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியினை தொடர்வதற்கு எந்த தடைகளும் இருக்க முடியாது காரணம் அரசாங்கம் கல்விக்காக கூடுதலான பணங்களை செலவு செய்து வருகின்றது.

இந்த முன்பள்ளி பாடசாலையினை அபிவிருத்தி செய்வதில் இப்பிரதேசத்தை சேர்ந்த சகோதரர் றமீஸ் பலதியாகங்களை செய்து வருகின்றார்.

இப்பிரதேச பெற்றோர்கள் உதவியாக இருக்க வேண்டும் அவர் இந்தப் பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிரந்தர கட்டடம் ஒன்றை பெற்றுக் கொள்ள பலதரப்பட்டவர்களிடம் சென்று சுமார் இரண்டு இலட்சங்களை சேகரித்துள்ளார் அவரை உற்சாகப்படுத்த வேண்டும் எதிர்காலத்தில் எம்மால் முடிந்த உதவிகளை இந்த பிரதேச மக்களின் கல்விக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அடிக்கல் நடும் நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அமைச்சர் றிசாத் பதூர்தீனீன் கல்முனை பிரதேச இணைப்பாளர் பைஷர், சம்மாந்துறை கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி, மல்கம்பிட்டி ஜீ.எம்.எஸ் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.அப்துல் மஜீட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--