2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பஸ் நிலையத்தில் இருந்த சட்டவிரோத கடை அகற்றப்பட்டது

Super User   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்ட விரோதக் கடை அறையொன்று கல்முனை மாநகர சபையினால் புதன்கிழமை (23) மாலை அகற்றப்பட்டுள்ளது.

கல்முனை பிரதான பஸ் நிலைய கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் மாநகர சபையின் அனுமதியின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்கடையறை அமைக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் உத்தரவின் பேரில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கல்முனை மாநகர சபை வேலைப் பிரிவினரால் இந்த சட்ட விரோத கடையறை அகற்றப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--