2021 மார்ச் 01, திங்கட்கிழமை

விஞ்ஞான ஆய்வுக்கூடம் திறப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


பொத்துவில் அல் அக்ஸா வித்தியாலயத்தில் வேல்ட் விசன் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூபாய் 3 இலட்சம் செலவில் புனரமக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுக்;கூடம் வியாழக்கிழமை(16) திறந்து வைக்கப்பட்டது.

அதிபர் ஏ.எம்.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆய்வு க்கூடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித், பிரதேச செயலாளர் எம்.என்.எம்.முஷ்;ரப், பிரதேச சபை உறுப்பினர் ஏ.பதுர்க்கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தரம் 5 தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதோடு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .