2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வறிய குடும்பங்களுக்கு உருளைக்கிழங்குகள் வழங்கிவைப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 2,500 திவிநெகும உதவி பெறும் வறிய குடும்பங்களுக்கு, காரைதீவு-1ஆம் மற்றும் 08ஆம் கிராம வாழ்வின் எழுச்சி சமூதாய அடிப்படை வங்கிகளில் நேற்று சனிக்கிழமை (18) உருளைக்கிழங்குகள் வழங்கிவைக்கப்பட்டன.

திவிநெகும உதவி பெறும் குடும்பத்தலைவிகளிடம் தலா 2 கிலோகிராம் உருளைக்கிழங்குகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் ஏற்பாட்டில் விவசாய அமைச்சின் மூலம் 5,000 கிலோகிராம் உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டன.

காரைதீவு பிரதேச செயலக திவிநெகும தலைமையக முகாமையாளர் எஸ்.எம்.அம்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்திக்குழுத் தலைவருமான சமூகநேயன் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட திவிநெகும பயனாளிகளுக்கு உருளைக்கிழங்கு பொதிகளை வழங்கி வைத்தார்.

இவ்வைபவத்தில் காரைதீவு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக இணைப்பாளர் தேசகீர்த்தி எம்.ஐ.றியாஸ் உட்பட திவிநெகும முகாமையாளர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமயப்பெரியார்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .