.jpg)
-ஏ.ஜே.எம்.ஹனீபா
இலங்கைப் போக்குவரத்து சபையின் சம்மாந்துறை புதிய சாலைக்கான அடிக்கல் நடும் வைபவம் திங்கட்கிழமை(27) சம்மாந்துறை சாலை முகாமையாளர் வை.எல்.எம்.தாசீம் தலைமையில் சர்வமத பிராத்தனைகளுடன் நடைபெற்றது.
சம்மாந்துறை சென்னல் கிராமம் 01ல் அமைந்துள்ள நீதிவான் நீதிமன்ற கட்டிடத்துக்கு அருகாமையில் ஒதுக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் இந்த சாலை அமையப் பெறவுள்ளது.
சம்மாந்துறைப் பிரதேச செயலகத்துக்கு அருகில் தற்போது இயங்கி வருகின்ற சாலை இடவசதியற்ற நிலையினை கவனத்திற் கொண்டு சம்மாந்துறை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா வின் ஒரு மில்லியன் ரூபாய் விஷேட நிதி ஒதுக்கிட்டின் கீழ் இந்த சாலை புதிதாக அமைக்கப்படவுள்ளது.
இன்றைய அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதீதியாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதம பிராந்திய முகாமையாளர் என்.அர்.எப்.அமீன் கலந்த கொண்டார்.