2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

பொதுமக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

George   / 2014 ஒக்டோபர் 28 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ஏ.தாஜகான் 

 
பொத்துவில் பிரிவு-1 பொதுமக்களின் பிரச்சினைகள் அறிதல் மற்றும் அதற்கான தீர்வினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையால், செவ்வாய்க்கிழமை(28) பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எச். அப்துல் றகீம் தலைமையில் இடம் பெற்றது.
 
இதன்போது, வடிகான்கள் ஒழுங்கின்மையால் மழைகாலங்களில் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் சில உள் வீதிகள் இன்னும் செப்பனிடப்படாத நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். 
 
அத்துடன் இப்பகுதி வாழ் பெண்களில் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கேட்டுக் கொண்டார்கள்.
 
இதனையடுத்து, இவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .