Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Thipaan / 2015 ஜனவரி 28 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
இன்று சமய அறநெறி ஒழுக்கத்தினை இளைஞர்களுக்கு போதிப்பது மிகவும் சவாலாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் இன்றைய நவீன காலத்து இளைஞர்கள் எதற்கும் கேள்வி கேட்கும் மனநிலை கொண்டவர்கள் என அமெரிக்க ஹவாய் ஆதீனத்தின் சற்குரு போதிநாதவேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தாம் செய்கின்ற ஒவ்வொரு விடயங்களுக்கும் கேள்வி கேட்கின்றார்கள். இதற்கு நாம் தகுந்த சரியான ஜதார்த்தமான பதிலை வழங்க வேண்டும். அது எமது கடமை அவ்வாறு வழங்க தவறிவிடுவோமானால் அவர்கள் சமய அனுட்டானங்களை (ஒழுக்கம்) ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்துக்கு இன்று (27) குருகுல ஆதீனத்தின் பணிப்பாளர் கண. இராஜரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுவாமி அங்கு பக்தர்கள் முன்னிலையில் தொடர்ந்து தனது ஆசீர்வாத உரையில் தெரிவித்ததாவது,
இன்று ஒரு கேள்வி இளைஞர்கள் மனதில் எழுந்திருக்கின்றது. அது என்னவென்றால் இறைவன் எமது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருக்கின்றார் தானே அப்படியானால் நாம் ஏன் நேரத்தை செலவு செய்து ஆலயங்களுக்குச் செல்ல வேண்டுமென்று. இதற்கு விடை துய்மையாகும்.
நாம் உடல் மற்றும் உடைகள் ஆகியவற்றில் துய்மையாக இருக்கின்றோம் இது புறத் துய்மையாகும்.
எமது மனம் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தி இருக்கலாம் அல்லது அதர்மமான செயல்களைச் செய்திருக்கலாம். எமது மனம் மற்றவர்களினாலும் அசுத்தம் அடைந்திருக்கலாம்.
அது எவ்வாறு என்றால் திருக்குறலில் போதிக்கப்பட்டதைப் போன்று அதாவது ஒரு சுத்தமான நீர் எவ்வாறு தான் செல்லுகின்ற இடங்களில் உள்ள மண்ணின் நிறத்திற்கு ஏற்றப நிறம் சுவை ஏற்று மாறுவது போன்று எமது மனமும் நாம் சேருகின்ற மனிதர்களைப் பொருத்து மாற்றம் அடைகின்றது.
எனவே நாம் அனைவரும் துய்மையாக வைத்திருக்க வேண்டிய ஒரு இடம் தான் மனம் அல்லது உள்ளம்.இதனை துய்மைபடுத்த வேண்டுமென்றால் ஆலய வழிபாடில் பங்கு கொள்ள வேண்டும்.
அங்கு இறைவனின் புனித இடத்தில் மனம் நம்மை அறியாமல் இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விடுகின்றது இதன் போது நாம் இறைவனின் அருளை நேரடியாக பெறுகின்ற பாக்கியத்தை பெற்று விடுகின்றோம். அங்கு அகம், புறம் இரண்டும் துய்மை பெற்று பாவத்திற்கான விடுதலையை அடைகின்றோம்.
எனவே அனைவரும் வாரம் ஒரு நாள் ஆலய வழிபாட்டில் ஈடுபடுதல் கட்டாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என சுவாமிகள் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago