Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜனவரி 29 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
கடந்தகால அரசியல் செயற்பாடுகள், சாத்தியப்படாத செயற்றிட்டங்கள் என்பவற்றாலேயே அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் திரும்பிச் சென்றன. சாபக்கேடான ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தின் அவல நிலைக்கு காரணமும் அதுவே என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் விளையாட்டு உத்தியோகத்தர் அ.ரிசாந்தன் தலைமையில் நேற்று புதன்கிழமை (28) நடைபெற்ற கழகங்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் விளையாட்டுத் திணைக்களத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 7 கழகங்களுக்குhன பதிவுச் சான்றிதழ் மற்றும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
அவர் மேலும் உரையாற்றுகையில், ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தை பொறுத்த மட்டில் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படுகின்றது.
ஆனால் அவ்வாறான மைதான அபிவிருத்திக்கு இதுவரையில் எந்த ஒரு அரசியில்வாதியும் பூரணமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தங்களது காலத்திலாவது இம்மைதானத்தை பூர்த்தி செய்வோம் என நினைக்கவுமி;ல்லை.
இதன் காரணமாகவே அனைத்து வேலைகளும் இடைநடுவே நிறுத்தப்படுகின்றது. இதனை ஒரு சாபக்கேடாகவே கருத முடியும் என்றார்.
மைதானங்களை பொறுத்த மட்டில் பொறுப்பு கூறவேண்டியவர்கள் பிரதேச சபை என்பதை அனைவரும் நன்கு உணரவேண்டும். அதைவிடுத்து மற்றவர்களின் பக்கம் குறைகளை கூறிக் கொண்டிருப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
உதாரணமாக இங்கு உடைந்து பாழடைந்த நிலையில் உள்ள அரங்கு அகற்றப்படவுமில்லை. புதிதாக நிர்மானித்த அரங்கு பூர்த்தி செய்யப்படவுமில்லை. அது அவ்வாறிருக்க அண்மையில் கூட பிரதேச சபையால் 10இலட்சம் ரூபா மைதான அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மைதானத்தை பயன்படுத்தும் நிலை உருவாக்கப்படவில்லை என்றார்.
விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு நிகழ்வை மாத்திரம் நடாத்துவதற்கு உருவாக்கப்பட்டதல்ல. பிரதேசத்திற்கு தேவையான கல்வி, சமூக நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படுவதுடன். அனர்த்த நடவடிக்கைளிலும் கைகோர்த்து மக்களை பாதுகாக்க முன்வரவேண்டும்.
அதிலும் குறிப்பாக கிராம மட்டத்தில் உள்ள கழகங்கள் ஆற்றுகின்ற சமூகப்பணிகள் போன்று நகரப்பகுதியில் உள்ள கழகங்கள் செயற்படுவதில்லை என்பது பெரும் குறைபாடு என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
05 Jul 2025