2021 மே 10, திங்கட்கிழமை

பிரதம பொலிஸ் பரிசோதகர் திடீர் இடமாற்றம்

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்;.கே.இப்னு அஸார், அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014.11.29ஆம் திகதி இடமாற்றம் பெற்று பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக வந்த பிரதம பொலிஸ் பரிசோதகர்  எம்;.கே.இப்னு அஸார், வியாழக்கிழமை (29) திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களாக பொத்துவில் பிரதேசத்தில் கடமையாற்றிய போது எந்தவொரு மக்களதும் எதிர்ப்புக்குள்ளாகாது கட்சி பேதமின்றி நேர்மையாக கடமையாற்றி வந்தார்.

இருந்த போதும் இவரது திடீர் இடமாற்றம் குறித்து பொத்துவில் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

பொத்துவில் பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரியாக பதுளை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X