2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

பேண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, இறக்காமம் கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட வாங்காமம் ஓராபிபாசா வித்தியாலத்துக்கான பேண்ட் வாத்திய உபகரணங்கள் மற்றும் போட்டோ பிரதி பண்ணும் இயந்திரம் போன்றவை கிழக்கு மகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால், வியாழக்கிழமை(29) வழங்கப்பட்டன.

புhடசாலையின் அதிபர் எம்.எஸ். லாஹீர் தலைமையில் இடம் பெற்ற இந்தநிகழ்வில், கோட்டக்கல்விப் பணிப்பாளர்
எம்.எல். மஹுமூட்லெப்பை பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மிகவு கஷ்டப் பிரதேச பாடசாலையான வாங்காமம் ஓராபிபாஷா வித்தியாலயத்தின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை சமூகம் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சரினால் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனை பாராட்டி பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து பணப்பரிசும் வழங்கப்பட்டது.

கிழக்கு மகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் வேண்டுதலின் பேரில் முன்னாள் உள்ளூராட்சி, மாகாண அமைச்சரினால் 4இலட்சம் ரூபாய் இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .