Kogilavani / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன், எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேச பிரிவிலுள்ள தம்பிலுவில் கடலில், நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில், குடிநிலத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஆனந்தகுமார் பிரகாஷ்ராஜ் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மேற்படி சிறுவன் தனது நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை(10) காலை நீராடச் சென்றபோது கடலலையினால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இதணையடுத்து நண்பர்கள் உடனடியாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மேற்படி சிறுவனை மீட்கும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
54 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
2 hours ago