2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 9 பேருக்கு அபராதம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரசா.சரவணன்


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்த 9 பேருக்கு 90 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.


கடந்த வாரம் இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமை காரியாலய அதிகாரிகளும்; அக்கரைப்பற்று பொலிஸாரும்; இணைந்து ஆலையடிவேம்பு, கோளாவில், கண்ணகிபுரம், அக்கரைப்பற்று பிரதேசங்களை சுற்றிவளைத்து சோதனைகள் மேற்கொண்டனர்.


இதன்போது, சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த பெண்கள் உட்பட 9 பேரை கைதுசெய்ததுடன் அதற்கு பயன்படுத்திய பெருமளவிலான மின்சார வயர்களையும் மீட்டனர்.


கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


பிணையில் விடுதலையானர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(10)  மீண்டும் நிதிமன்றில் ஆஜரானபோதே  தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 90000 அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .