2021 மே 18, செவ்வாய்க்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை என்பன இணைந்து டெங்கு ஒழிக்கும் வேலைத்திட்டத்தை புதன்கிழமை (11) மேற்கொண்டன.

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரி, அலுவலக அதிகாரிகள் மற்றும் பிரதேச சபையின் ஆளணியினரின் உதவியுடன் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் என இனங்காணப்பட்ட பகுதிகளில் நுளம்புகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தேநீர் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளும் சோதனையிடப்பட்டன.

குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கையுடன் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களின் உரிமையாளர்களுக்கெதிராக எச்சரிக்கையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.நஸீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலர் இதன்போது கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .