Suganthini Ratnam / 2015 ஜூலை 28 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, பாலமுனை பிரதேசத்தில் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட ஏழு மற்றும் ஒன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளையும் அம்பாறை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியுமான எஸ்.எல்.ஏ.றஸீட் செவ்வாய்க்கிழமை (28) உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பிள்ளைகளின் தாய் வெளிநாட்டில் உள்ளதால் தந்தை மறு திருமணம் முடித்து சென்றுள்ளார். இந்தப் பிள்ளைகள் உறவினரின் வீட்டில் வசித்துவந்த நிலையில், அநாதரவாக வீதியில் நின்றபோது இவர்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
இவர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியுமான எஸ்.எல்.ஏ.றஸீட் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, மாவட்ட சிறுவர் நன்னடத்தை காரியாலயத்தில் அதனூடாக சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒரு வாரத்துக்கு விடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
39 minute ago
46 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
46 minute ago
8 hours ago