2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் மினி சூறாவளி; 25 வீடுகள் பகுதியளவில் சேதம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்கள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மழையுடன் வீசிய மினி சூறாவளி காரணமாக 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

திங்கட்கிழமை (03) மாலை வீசிய இந்த மினி சூறாவளியினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 13 வீடுகள்; பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அட்டாளைச்சேனை அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.மிஸ்பாஹ் தெரிவித்தார்.

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மரக்கிளைகள் முறிந்து விழுந்ததினால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் முகம்மட் சியாம் கூறினார்.

மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீடுகள், கடைகளின் ஓடுகள், சீற் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டன. மேலும், மரங்கள் முறிந்து விழுந்ததினால்; மின்சாரக் கம்பிகள் அறுந்ததை தொடர்ந்து  சற்றுநேரம் மின்விநியோகம் தடைப்பட்டு, பின்னர் வழமைக்கு திரும்பியது,   


 


  Comments - 0

  • aliyar Wednesday, 05 August 2015 01:28 PM

    news

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .