2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

அலையில் அள்ளுண்ட சிறுவனை தேடும் பணி

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுக்கல் கடலில் புதன்கிழமை (05) நீராடிக்கொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் கடல் அலையில் அள்ளுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர்கள் இருவர் கடலில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது, பொத்துவிலைச் சேர்ந்த 15 வயதுடைய  சிறுவன் அலையில் அள்ளுண்டுள்ளார். இதேவேளை, மற்றைய சிறுவன் கரை சேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், அலையில் அள்ளுண்ட சிறுவனை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .