2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கல்முனை பொது நூலக பெயர் பலகை சேதம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ் 

கல்முனை எ.ஆர்.எம். மன்சூர்  பொது நூலக பெயர் பலகை திங்கட்கிழமை (10) அதிகாலை இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டு நூலக வளாகத்தின் பின்புறமாகவுள்ள பற்றைப்பகுதியில் வீசப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நூலக  தலைமை பொறுப்பதிகாரியினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.

கல்முனை தனியார் பஸ் தரிப்பிடத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை(09) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரினால் சேதமக்கப்பட்ட நினைவுப்படிகம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார்  50 மீட்டர் தூரத்தில் இந்நூலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .