2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

காரியாலயத்தை சேதப்படுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார காரியாலயத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை திங்கட்கிழமை (10) இரவு கைதுசெய்ததாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தயா கமகேவுக்கு ஆதரவு தெரிவித்து பொத்துவில் ஆர்.எம்.நகர் 17ஆம் பிரிவில் திறந்துவைக்கப்பட்ட தேர்தல் பிரசாரக் காரியாலயம் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு சேதமாக்கப்பட்டதாக பொத்துவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை செய்த நிலையில், சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .