2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

முறைமைகள் மாற்றப்படவில்லை: வைரமுத்து அருளம்பலம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

ஆயுத பலத்தால் செய்ய முடியாது போன விடயத்தை மக்கள் தமது வாக்குப்பலத்தினால் ஓர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்ததா என்றால் அது இல்லை என அம்பாறை மாவட்ட வேட்பாளர் வைரமுத்து அருளம்பலம் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் எமது தமிழ் இனம் அனுபவித்து வந்த இன்னல்களுக்கு இந்த தேர்தலின் ஊடாக ஒரு விடிவைத் தேடிக் கொள்ள தமிழ் மக்கள் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். 

நாட்டில் ஆட்சிக்கு வருகின்ற சிங்கள கட்சிகளின் தலைவர்கள் யாராக இருந்த போதிலும் அவர்களின் கொள்கைகளில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதில் காலத்தை கடத்துபவர்களாகவே இருந்து வருகின்றனர். இந்நிலைமை இனிமேலும் தொடரக்கூடாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .