Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
எதிர்வரும் பொதுத் தேர்தல் தினத்தில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கிழக்கு மாகாண கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையை சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) புதன்கிழமை (12) நடத்தியது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மக்கீன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சிப்பட்டறையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 125 கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்தகால தேர்தல் வன்முறைகள், அரசாங்க சொத்துக்கள் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் மிகவும் குறைந்தளவான முறைப்பாடுகளும் சம்பவங்களுமே பதிவாகியுள்ளதாக கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மக்கீன் இதன் போது தெரிவித்தார்.
51 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago