Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எ.எஸ்.எம்.முஜாஹித்
முஸ்லிம் சமுகத்துக்கு தலைமை தாங்கும் துணிச்சல் மிக்க தலைமைத்துவம் எங்கிருந்து வந்தாலும் பிரதேசவாதத்தை மறந்து ஏற்றுக்கொள்வோம் என கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி மேலோங்கிக் கொண்டிருப்பதை சகித்துக்கொள்ள முடியாத சதிகாரர்கள் பிரதேசவாதத்தை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சம்மாந்துறை மக்கள் கடந்த காலத்தில் விட்ட தவறை இத்தேர்தலிலும் விட்டுவிடாது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக சிறந்த கல்விமான்களை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .