2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கைகலப்பில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்த நான்கு பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு இடையிலேயே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பாலமுனை நான்காம் பிரிவு ஹூஸைனியா நகரைச் சேர்ந்த றிஜான் (வயது 28), புகாரி ஜெலீல் (வயது 35), செய்னுலாப்தீன் (வயது 60), சம்சுல் மகீன் (வயது 36) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .