2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு 100 மெற்றிக்தொன் கரும்பு அறுவடை செய்ய முடியுமென கரும்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரும்பு அறுவடையை மிக இலகுவாகவும் விரைவாகவும், அறுவடை செய்ய முடிவதாகவும் இதனால் தாங்கள் கூடுதலான இலாபத்தை பெறமுடியுமென கரும்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கரும்பு அறுவடைக்கு வேலையாட்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றதாகவும் கரும்பு உற்பத்தியாளர்கள் கூறினார்கள்.

இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்து வருவதையிட்டு கரும்பு உற்பத்தியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .