2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

நற்பிட்டிமுனை பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 24 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு

Kogilavani   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

நற்பிட்டிமுனை பாடசாலைகளின் அபிவிருத்திக்காக கிழக்குமாகாணசபை உறுப்பினர் எம்.எல். துல்கர்நையீம் 24 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

நற்பிட்டிமுனை அல்-அக்க்ஷா மகாவித்தியாலயத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் மாடிக்கட்டிடத்தின் மேல்பகுதியை நிறைவுசெய்வதற்காக 20 இலட்சம் ரூபாவும்,  நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் மலசலகூடத்தொகுதியை அமைப்பதற்காக 4 இலட்சம் ரூபாவையும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதேவேளை,  அல்-அக்க்ஷா மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ள அனர்தத்தின் போது இடிந்து வீழ்ந்த  வகுப்பறை கட்டிடத்தொகுதியை  மீளமைப்பதற்கான நடவடிக்கைகளையும் கிழக்குமாகாண கல்வி அமைச்சர் விமல்வீர திஸாநாயக்க ஊடாக மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர்நையீம் மேற்கொண்டு வருகின்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .