2021 ஜனவரி 27, புதன்கிழமை

30 குடும்பங்களுக்கு நுண்கடன் உதவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான நுண்கடன் உதவிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் வீ.அரசரத்தினம் தலைமையில் கடனுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, நிhவாக உத்தியோகத்தர் கனகரத்தினம், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர், சமுர்த்தி முகாமையாளர்களான எச்.அப்துல் அலீம், எம்.கமல பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் 30 குடும்பங்களுக்கு இக்கடன் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .