2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

35 குடும்பங்களுக்கு இலவசமாக குழாய்நீர்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிலிருந்து இலவசமாக குழாய் நீரைப் பெற்றுக்கொள்வதற்கான காசோலைகள்  சம்மாந்துறை, சென்னல் கிராமத்தில்  வருமானம் குறைந்த   35 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக திங்கட்கிழமை (07) வழங்கப்பட்டன.

இதன்போது, ஒருவருக்கு 7,000 ரூபா படி  35 குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிலிருந்து இலவசமாக குழாய் நீரைப் பெற்றுக்கொள்வதற்காக சம்மாந்துறையில்  1,000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அனுசரணையுடனும் சம்மாந்துறை சமூக மற்றும் பல்கலாசார அமைப்பின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் கலந்துகொண்டார். அதிதிகளாக காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைநெறிகள் மற்றும் அரபுமொழி பீடாதிபதி அஷ; ண்ஷய்க் எம்.பீ.எம்.அலியார்,  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்;துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X