2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

துப்பாக்கி முனையில் 5 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை

Super User   / 2011 ஜனவரி 10 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை திருக்கோவில் விநாயகபுரத்திலுள்ள வீடொன்றில் நேற்றிரவு சுமார் 5லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த நால்வர் வீட்டாரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திவிட்டு நகைகளை கொள்ளயடித்துள்ளதாக புகாரிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை திருக்கோவில் உப தபாலகத்தையும் உடைத்துக் கொள்ளையடிக்க ஒரு குழு முயற்சித்ததாகவும்  பின்னர் ஊர்மக்களைக் கண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X