2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு வராத 6 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

Kogilavani   / 2011 ஜூன் 15 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றின் 6 ஆசிரியர்களுக்கு  உடனடியாக இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அதிபர் சேவைத் தரத்திலுள்ள புதிய அதிபரொருவர் குறித்த பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.கே.எம்.இப்றாகிம் கடந்த வாரம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு மேற்படி பாடசாலைக்கு  சென்றிருந்த சமயம், அப் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எவரும் உரிய நேரத்துக்குச் சமுகமளிக்காமை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே மேற்படி ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களும், புதிய அதிபர் நியமனமும் இடம்பெற்றுள்ளன.

மேற்படி பாடசாலையில் 258 மாணவர்கள் கல்வி பயிலும் அதேவேளை 17 ஆசிரியர்கள் உள்ளனர்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு இப் பாடசாலை மாணவர்கள் இவ்வருடம் முதன் முறையாகத் தோற்றவுள்ளனர்.

இந்தப் பாடசாலையில் கல்வி அதிகாரி திடீர் விஜயம் மேற்கொண்டபோது பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எவரும் உரிய நேரத்துக்குச் சமுகமளித்திருக்காமையை தமிழ் மிரர் முதலில் செய்தியாக வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.                                                 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X