2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கலாபூசண விருது

Super User   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கலாச்சார மரபுரிமை அமைச்சினால் இம்மாதம் 15 ஆம் திகதி கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த கலையரங்கில் நடைபெறவுள்ள கலாபூசண விருது வழங்கும் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்நத 6 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

முஸ்லிம் சமய  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சாய்ந்தமருதைச் சேர்ந்த கவிஞர் கே;எம்.அப்துல் அஸீஸ், எம்.எம்.எம்.மஹ்ருப் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.அஸீஸ், எஸ்.எச்.எம்.முஸ்தபா அக்கரைப்பற்றைச்; சேர்ந்த எம்.ஏ.பகுறுதீன் மருதமுனையைச் சேர்ந்த ஏ.முஹம்மது பாறூக் ஆகியோரே கலாபூசண விருதுக்காக தெரிவு செய்யப்பட்வர்களாகும்.

இம்முறை நாடு தழுவிய ரீதியல் 50 பல்துறை சார்ந்தவர்களுக்கு கலாசார மரபுரிமைகள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயகவினால் விருதும் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--