2020 நவம்பர் 25, புதன்கிழமை

அக்குலப கிராம விவசாயிகளுக்கு 900 புசல் விதைநெல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

நாம் பயிரிடுவோம் நாட்டை வளப்படுத்துவோம் எனும் திட்டத்திற்கமைய, அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய விவசாயக் கிராமமான மகாஓயா பிரதேச செயலகப்  பிரிவிற்குட்பட்ட அக்குலப கிராம விவசாயிகளுக்கு 900 புசல் விதை நெல் பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


அம்பாறை பிரதி விவசாய பணிப்பாளர் நிமல் தயாரெட்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


90 குடும்பங்களுக்கு 10 புசல் வீதம் இந்த விதை நெல் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த விதை நெல்லின் பெறுமதி 9 இலட்சம் ரூபாவாகும் என பிரதி விவசாய பணிப்பாளர் நிமல் தயாரெட்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--