2020 நவம்பர் 28, சனிக்கிழமை

அம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது, துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு  சலாம் பள்ளி  பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக  விசேட அதிரடிப்படையினருக்கு, நேற்று (22) தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் உரைப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறீன் பீல்ட் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைதானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--