எஸ்.கார்த்திகேசு / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது நாட்டுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியமில்லை எனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பே தேவை. இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் துணிச்சல் இல்லையெனக் குற்றஞ்சாட்டினார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பின் போதே, இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள, முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் கொண்டு, நாட்டில் சண்டையிட்டுக் கொண்டு தமிழ் மக்கள் வாழ விரும்பவில்லை எனவும் இன நல்லிணக்கத்துடன்தான் வாழ்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதைத் தவிர, தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு எதையும் செய்யவில்லை எனப் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை அப்பட்டமான பொய் எனவும் அவர் தெரிவித்தார்.
80 சதவீதமான காணி விடுவிப்பு, ஒரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுவிப்பு, தமிழ்ப் பிரதேச அபிவிருத்திகள், புதிய அரசமைப்புக்கான பேச்சுகள் எனப் பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் எனவும், சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.
மேலும், புதிய அரசமைப்பை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் பின்நிற்கின்றார்கள் எனவும் இதனை நிறைவேற்றிவிட்டால் எங்கே தேர்தலில் தோற்றுவிடுவோம் என அவர்கள் அச்சுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
11 minute ago
20 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
39 minute ago