2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

நிந்தவூர் பிரதேச சபை கூட்டமர்வு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை, நிந்தவூர் பிரதேச சபையின் 35ஆவது கூட்டமர்வு,  தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில், பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று (23) காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது,  கடந்த ஜனவரி மாதத்துக்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல், கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் மற்றும் தவிசாளரின்  உரை என்பன தொடர்ச்சியாக  இடம்பெற்றதுடன், இக்கூட்ட அமர்வில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், கடிதங்கள் வாசிக்கப்பட்டு, தீர்மானங்களும் பெறப்பட்டன.

குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களை மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், பொதுச் சந்தை திருத்தல் தொடர்பாகவும் நூலகத் திருத்தம் தொடர்பாகவும் உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, அது சம்பந்தமாக ஆலோசனைகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .