Niroshini / 2016 மார்ச் 04 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை சிறந்த முறையில் முன்கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரங்கள் அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மிகவும் பின்தங்கிய இறக்காமப் பிரதேசத்தில் மக்கள் பயனடையக் கூடிய வகையில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் நன்னீர் மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அத்துடன், காணி சுவிகரிப்பு தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுத்து காணி சுவிகரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கடந்த வருடம் இறக்காமப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நெல்சிப் திட்டம் மற்றும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆரயப்பட்ட தோடு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025